அங்கன்வாடி பொருட்களை வாங்காததற்கு காரணம் என்ன? - தீவிர விசாரணை செய்யும் அங்கன்வாடி ஊழியர்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது அங்கன்வாடி கடைகளில், ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் இவை கணினி மயமாக்கப்பட்டு செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் அங்கன்வாடி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.   குடும்ப அட்டையை மற்றவர்களிடம் கொடுத்து அனுப்பி இப்போது பொருட்கள் வாங்க முடியாது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், தற்போது போலி குடும்ப அட்டைகளை ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் இலவச பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனால் குடும்ப அட்டை எல்லா வீடுகளிலும் உள்ளது.  ஒரு சில குடும்பத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வாங்குவது கிடையாது.

இதனால், கடந்த 3 மாதமாக, தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் அங்கன்வாடி பொருட்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த அட்டைதாரர்கள்  பொருட்கள் வாங்காதது ஏன்? அவர்கள் வைத்திருப்பது போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரணை செய்ய உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின் படி, கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடை ஊழியர்கள் போன் செய்து, என்ன காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரணை செய்து, அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை மூலம் அனுப்பி வருகின்றனர். இதுபற்றி நியாய விலைக் கடைக்காரர்கள் கூறுகையில், 

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எதற்காக பொருட்கள் வாங்க வரவில்லை என்று விசாரிப்பதன் நோக்கம், அந்த அட்டை போலி குடும்ப அட்டையா? என்பதை கண்டறிவதற்குதான். குடும்ப அட்டையில் உள்ளவர்கள் அந்த முகவரியில் தான் உள்ளார்களா? அல்லது வீடு மாறி சென்று விட்டார்களா? அல்லது குடும்பத்தலைவர் யாரேனும் இறந்து விட்டார்களா? என்று விசாரிக்கிறோம். இதில் ஓரளவு போலி குடும்ப அட்டைகளையும் கண்டறிய முடியும். அதன் மூலம்  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what reason people not buy anganwadi products


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->