வாக்காளர் பட்டியல் படிவங்கள் கோவிலில் குவிந்து கிடந்தது… யார் வைத்தார்கள்? எப்படி வந்தது? பரபரப்பு
Voter list forms piled up temple Who put them How did they get there Excitement
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் அதிர்வெள்ளி ஏற்படுத்தும் விசித்திரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் செல்வ விநாயகர் கோவிலில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்க வேண்டிய 300 கணக்கெடுப்பு படிவங்கள் ‘கேட்பாரற்று’ படிந்துபோல் கிடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கோவிலின் ஒரு மூலையில் கிடந்த அந்த படிவங்களுடன், ஒரு குறிப்பேடு புத்தகமும் இருந்தது. படிவங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த வனிதா என்ற அங்கன்வாடி பணியாளரின் பெயர் இருந்தது.இதை அறிந்த எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுபாதேவி விரைந்து கோவிலில் விசாரணை நடத்தினர்.
“கோவிலில் அரசு ஆவணங்கள்? எப்படி வந்தது?” என்ற கேள்வியில் அதிகாரிகள் குழம்பிக் களைத்தனர்.பின்னர் தொடர்பு கொண்டபோது, வனிதா,உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அவசரக் கூட்டத்துக்கு செல்ல வேண்டி,படிவங்களை பாதுகாப்பாக வைத்திருக்க கோவிலில் ஒருபெண்ணிடம் ஒப்படைத்திருந்ததாக விளக்கம் அளித்தார்.
ஆனால், “யாரோ நபர்கள் பையில் இருந்த படிவங்களை எடுத்துச் சிதறவிட்டிருக்கலாம்” என்ற சந்தேகத்தையும் அவர் முன்வைத்தார்.சம்பவம் தொடர்பாக 300 படிவங்களும் மீட்கப்பட்டு வனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
எனினும், வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடந்து வரும் முக்கியமான நேரத்தில், அரசு ஆவணங்கள் கோவிலில் குவிந்து கிடந்தது எப்படி? யார் இதற்கு காரணம்? என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.இந்நிலையில், இந்த மர்ம சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரின் உத்தரவில் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Voter list forms piled up temple Who put them How did they get there Excitement