மன்னிப்பு கேட்காமல் விஜய் சேதுபதியை நோஸ்கட் பண்ணி திமிராக பேசிய விஷால்! பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன்களில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விவாதங்கள், போட்டியாளர்களின் நடத்தை மற்றும் கருத்துக்கள் குறித்து பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தற்போதைய சீசனில் விஜே விஷால் சில பங்கேற்பாளர்களை அவதூறாக பேசியது மற்றும் அவர்களை குறைசொல்லும் வகையில் நடந்துகொண்டது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, சௌந்தர்யாவை பற்றிய அவரது கருத்துக்களும் அவதூறான கருத்துக்களை மற்ற போட்டியாளர்களிடம் பரப்பியதும் மக்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றிருக்கின்றன.

இந்நிலையில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி நேரடியாக விஷாலின் பேச்சுக்களை கண்டித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இதை ஏற்க மறுத்த விஷால், தனது சொற்களை உரிமையுடன் விளக்க, ஒரு முறையான விவாதத்திற்கு மாறியது. இதனால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமையை சமாளிக்க, விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து விஷாலுக்கு எச்சரிக்கை (yellow card) வழங்கும் முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எதிர்காலத்தில் இவரது நடத்தை மற்றும் பேச்சுக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பில், இதுவொரு மாற்றத்திற்கான நல்ல முடிவாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vishal who snubbed Vijay Sethupathi without apologizing and spoke arrogantly Action taken by Bigg Boss


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->