உலகமகா நடிப்புடா சாமி.. சேட்டை செய்யும் குரங்கிடம் இருந்து, சாமர்த்தியமாக தப்பிய சிறுவன்.! - Seithipunal
Seithipunal


சில்மிஷம் செய்த குரங்கிடம் இருந்து சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக தப்பிய சம்பவம் தெரியவந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி மறைக்குளம் கிராமத்தில், குரங்கு ஒன்று ஊருக்குள் புகுந்து பலரையும் விரட்டியடித்து அச்சுறுத்தி வருகிறது. சுமார் 15 க்கும் மேற்பட்ட நாய்களையும் தற்போது வரை கடித்துள்ள நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன் குரங்கிடம் சிக்கியுள்ளார். 

பாரதி என்ற பெயரைக்கொண்ட சிறுவன், மறைக்குளம் அரசு பள்ளியின் சுற்றுச் சுவரில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக குரங்கிடம் சிக்கியுள்ளார். குரங்கிடம் சிறுவன் சிக்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயற்சித்தனர். 

அங்கு சுற்றித் திரிந்து நாய்களும், சிறுவனை மீட்க வந்த மனிதர்களும் வேறு வழியின்றி சிறுவனை வேடிக்கை பார்த்தபடியே இருந்துள்ளனர். சிறுவன் சாமர்த்தியமாக சுவரின் மீது அமர்ந்தவாறு சிலை போல நடித்தான். முதலில் கையை பிடித்து இழுத்த குரங்கு, பின்னர் முத்தம் கொடுத்து தள்ளி பார்த்து சேட்டைகள் செய்துள்ளது. பின்னர் நெஞ்சில் காதுகளை வைத்து பார்த்து இதயத்துடிப்பு பரிசோதனை செய்த நிலையில், சிறுவன் சிலை போல இருந்ததால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 

சுமார் 7 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் குரங்கு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சிறுவன் சுவரில் இருந்து கீழே குதித்து வந்துள்ளான். சிறுவன் குரங்கிடம் கடிவாங்கிவிடுவான் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சிறுவனின் சாமர்த்தியம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், குரங்கை கூண்டு வைத்து பிடித்து வனத்தில் அல்லது வன உயிரியல் காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Child Safely Escape form Monkey


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->