விருதாச்சலம் மாணவி திலகவதி கொலை வழக்கு! விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி! - Seithipunal
Seithipunal


திலகவதி ஆணவக் கொலை செய்யப்பட்டாரா..?

 

கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி திலகவதியின் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த டி.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி திலகவதி என்பவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த மாணவி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்தார். இந்நிலையில் ஒரு தலை காதல் காரணமாக அவருடன் படித்த ஆகாஷ் என்ற மாணவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த கொலை சம்பந்தமாக காவல்துறையினர் ஒரு தலை காதல் காரணமாக திலகவதி கொலை செய்யப்பட்டதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தனர். 

மாணவன் ஆகாஷ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் "இது ஒரு ஆணவக் கொலை என்றும் ஆகாஷ் மாற்று சமூகம் என்பதால் காதலை ஏற்காத மாணவியின் பெற்றோர்களே கொலை செய்திருக்கலாம். இந்த கொலை பழகியை மாணவன் ஆகாஷ் மீது சுமத்தியுள்ளனர்" என வாதத்தை முன் வைத்துள்ளார். 

இந்தக் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை முடிவடைந்த நிலையில் கடலூர் மகிளா நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் மாணவன் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 

மேலும் போலீசார் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. சாட்சிகளும் சரியான விதத்தில் இல்லை என்ற காரணத்தினால் மாணவன் ஆகாஷ் விடுதலை செய்துள்ளதாக கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் இந்த வழக்கின் சம்பந்தமான முழு விவரங்களை தீர்ப்பில் வழங்கப்பட்டு விட்டது. வழக்கறிஞர்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என நீதிபதி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudachalam student Thilakavathi murder case The criminal was acquitted


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->