இது ஜனநாயக நாடு... 'யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்' - உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில் இதற்கான அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தில் கிடைத்ததும் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால் ரசிகர்கள் மற்றும் திரை துறையைச் சேர்ந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயலை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜயின் மக்கள் பணிகள் சிறக்கட்டும் புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay entered politics Udayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->