தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை சட்டப்படிப்புகளுக்கும், உணவு பால் வளம், கோழி இனம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துகிறது.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும், சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் எந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த படிப்புகளுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர்களுக்கான தரவரிசை பட்டியலை கடந்த ஜூலை 26ம் தேதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மருத்துவ கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் எந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veterinary medicine course councelling from today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->