வேலூர் | தங்கக்கோவில் உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல் பதித்த கிரீடம்! - Seithipunal
Seithipunal


வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்தி கணபதி விக்கிரகம் 1,700 கிலோ வெள்ளியால் வடிவமைக்கபட்டு கட்டப்பட்ட கற்கோவில் கடந்த 2021-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன 880 கேரட் கொண்ட வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நேற்று இந்த வைடூரிய கிரீடத்தை சக்தி அம்மா, ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவித்து தீபாராதனை கான்பிக்கபட்டது. 

பின்னர் இது தொடர்பாக சக்தி அம்மா தெரிவிக்கையில், 700 கேரட் அளவிலான கல்லை உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக கருதுகின்றனர். 

ஆனால் தற்போது ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தில் பதிக்கப்பட்ட 880 கேரட் வைடூரிய கல்தான் உலகிலேயே மிகப்பெரிய கல்லாகும். 

இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடியாக இருக்கும். கேது பகவானின் சக்தியை வைடூரியம் வெளிப்படுத்துவதாகும். வைடூரிய கிரீடம் அணிந்த ஸ்ரீசக்தி கணபதியை நாம் தரிசிக்கும்போது பலவகையான தோஷங்கள் நீங்கி, மன அமைதி, ஞானம், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore golden temple world largest vaiduryam stone crown


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->