சென்னையின் கடைசி நம்பிக்கைக்கு ஏற்பட்ட சோதனை.!! அடுத்து நிகழப்போகும் சோகம்.!!  - Seithipunal
Seithipunal


சென்னைக்கு குடிநீர் கடலுார் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ள, வீராணம் ஏரியில் இருந்து, அனுப்பப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக, வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்துயில்லை. இருப்பினும், வீராணம் ஏரியில் இருந்து, தினமும் சென்னைக்கு, குடிநீர் அனுப்பப்பட்டு வருகின்றது. 

chennai water issue,seithipunal

இதன் காரணமாக, ஏரியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. அந்த ஏரியின், தரை தெரியும் அளவிற்கு தண்ணீர் வற்றி இருக்கின்றது. தற்போது, ஏரியின் மொத்த கொள்ளவு, 1,465 மில்லியன் கன அடியில், வெறும் 280 மில்லியன் கன அடி மட்டுமே, தண்ணீர் தற்பொழுது உள்ளது. 

வீராணம் ஏரி, seithipunal

இதனால், வினாடிக்கு, 74 கன அடி நீர், சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது, வெறும் 40 கன அடி மட்டும் தான் அனுப்பப்படுகிறது. ஒரு நாளைக்கு, 15 - 20 மில்லியன் கன அடி தண்ணீர், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. 

தற்போது ஏரியில் உள்ள நீர் இருப்பை கணக்கிடுகையில், இன்னும், 15 நாட்கள் மட்டுமே, சென்னைக்கு குடிநீர் அங்கிருந்து அனுப்ப முடியும். எனவே,  மேட்டூரில் இருப்பு உள்ள, 14 டி.எம்.சி., தண்ணீரில், 1 டி.எம்.சி., தண்ணீர் பெற்று, வீராணத்தில் தேக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veeranam lake may dry in few days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->