திண்டுக்கல் | இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூர் அடுத்த அய்யலூர் பகுதி, திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், அதன் சர்வீஸ் சாலை ஓரத்திலும் ஆக்கிரமிப்புகள் செய்து வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகள் கட்டியுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தது.

இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்றும், இன்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அய்யலூர் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை எடுக்கும் இடிக்கும் பணியில் கனரக வாகனம் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென சரிந்து கனரக வாகனத்தின் மீதே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

அதே சமயத்தில் கட்டிடத்தை இடிக்க வந்த கனரக வாகனத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்தன. ஓட்டுனருக்கு சிறு காயம் கூட இல்லாமல் உயிர்தப்பினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VedaChandru Ayyalur Building accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->