பொன்பரப்பி சம்பவம் குறித்து டிக்டாக் செயலியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியினர் பலர் கைது  செய்யப்பட்டனர்  - Seithipunal
Seithipunal


சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக கூட்டணி தொண்டரை முதலில் தாக்கியதால் இருதரப்பினரிடையே மோதல் உருவானது அதன் பின்னர் இரு தரப்பிலும் 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது தற்போது காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் இப்போது  சற்று பதற்றம் தணிந்து இருக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் சிலர்  வன்னியர் சமூகத்தை மிக  தரக்குறைவாகவும் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக டிக்டாக் போன்ற சமூகவலைத்தகளில் தொடர்ந்து பேசிவருகின்றனர்.

இந்நிலையில் பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். டிக்டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக விஜயகுமார் என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர் இதே போன்று கடலூர் சேலம் பகுதியில் கூட வன்னியர் சமூகத்தை  தவறாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சியினர் பலர் கைது  செய்தது குறிப்பிடத்தக்கது 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck party members arrest for ponparape issues


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->