அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டத்தில் திருத்தம் அவசியம் - திருமாவளவன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டத்தில் திருத்தம் அவசியம் - திருமாவளவன் பேட்டி.!

சமீப காலமாகவே தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு மாறாக பிறப்பையும், ஆகம விதிகளையும் அளவுகோலாக கொண்டு நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருப்பது தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு எதிரானது. 

இந்தத் தீர்ப்புத் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டிற்கு சென்றுள்ளது. ஆனால், ஏற்கனவே இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்." என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck leader thirumavalavan press meet in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->