ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே விரைவில் வந்தே மெட்ரோ ரயில்..!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது போல அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இருந்து மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் தற்பொழுது அரக்கோணம் ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

மின்சார ரயிலுக்கு மாற்றாக வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் வந்தே மெட்ரோ ரயில் அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்க முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவேற்றவுடன் மக்கள் சேவைக்காக பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள்தோறும் வேலைக்காக பலர் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில் மக்களிடம் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande Metro Rail Project between Arakkonam and Jolarpet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->