'வந்தே பாரத்' சபரிமலை சிறப்பு ரெயில்: வாரந்தோறும் இந்த நாட்களில் இயக்கப்படும்! - Seithipunal
Seithipunal


சென்னை, எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்பட்டது முதல் இதுவரை பயணிகள் முழு அளவில் பயணித்து வருகின்றனர். 

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் இருந்து 5 நாட்கள் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்ட அனைத்து சிறப்பு ரயில்களிலும் பயணிகள் நிரம்பின. 

இந்நிலையில் தற்போது சபரிமலை சிறப்பு ரயிலாக வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது. ஐயப்பன் கோவிலுக்கு சபரிமலை பக்தர்கள் செல்ல வசதியாக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வியாழன் தோறும் எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 2:15 மணிக்கு சென்றடையும் மீண்டும் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11:15 மணிக்கு எழும்பூர் வரும். 

இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கு முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande Bharat Sabarimala Special Train


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->