நாகர்கோவில் வரை நீடிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் சேவை! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்தே பாரத் ரயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு ரயில் இயக்கப்படுகிறது. 

திருநெல்வேலி-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக திருநெல்வேலி-சென்னை இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஜனவரி 4-ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மதியம் 2:10 மணிக்கு சென்றடைகிறது. மீண்டும் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11:45 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande Bharat express train extension Nagercoil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->