கோயிலை இடிச்சா சுடுகாட்டுக்கு போயிடுவ" சாமியாடி சாபம் விட்ட பெண்.. ஜெர்க்கான அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு, வண்டலூர் அருகே கொளப்பாக்கம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் காளி கோவில் என்று இருந்து வந்தது. அந்த பகுதியில் திருநங்கைகள் உட்பட பல பொதுமக்களும் அரங்கேறும். இது நீர் நிலையில் கட்டப்பட்டு இருப்பதால் இதனை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் இன்று வந்தனர். 

ஆனால் கோயிலை இடிக்க கூடாது என்று கூறி பொதுமக்கள் அங்கு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். அப்பொழுது கோயிலில் இடிக்க அதிகாரிகள் முயற்சித்தனர். திடீரென ஆவேசம் அடைந்த ஒரு பெண் சாமியார் காய்ந்த மிளகாய் ஆவேசமாக அரைத்து சாமி சிலைகள் மீது தெளித்து இந்த கோவிலை இடிக்கும் அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும் என சாபமிட்டார். 

இதை கேட்ட அதிகாரிகள் அதிர்ந்தே போயினர். அதன் பின்னர் கோயிலை இடிக்க வேண்டாம் மேற்கூரையை மட்டும் நாங்களே அகற்றி விடுகிறோம். 

சாமி சிலைகளை தொட வேண்டாம் என்று அங்கிருந்த அனைவரும் கேட்டுக் கொண்டனர். சில பகுதிகளை மட்டும் அதிகாரிகள் இடித்து தள்ளிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vandalur kali kovil govt officer shock


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->