போலீஸ் போல் நடித்து 30 பவுன் தங்க நகையை ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்.. தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியை சேர்ந்த நகைக்கடை வியாபாரியான அப்துல் ரசாக் என்பவர் கோவைக்கு சென்று நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு பார்சலை வாங்கியுள்ளார்.

அந்த பார்சலில் 6 தங்க சங்கிலிகள் உள்பட 30 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. அதன் பின்னர் அப்துல் ரசாத் இரவு 11:15 மணியளவில் விமான நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது போலீஸ் உடைய அணிந்த மூன்று பேர் அப்துல் ரசாக்கிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது காரில் சென்ற போது அவர்கள் மூன்று பேரும் பார்சலை பறிக்க முயன்றுள்ளனர். இதில் அப்துல் ரசாக் பார்சலை குறைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து  பார்சலை கொடுக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி 30 பவுன் இருக்கும் தங்கநகை பார்சலை பறித்துக் கொண்டு அப்துல் ரசாக்கை காரிலிருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக அப்துல் ரசாக் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unknown person cheat and theft 30 savaran golds


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->