அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம் மீண்டும் ரத்து - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி, ராமநாதபுரம், மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து, மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா-விற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amitsha tamilnadu programmes cancel


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->