கள்ளக்காதலை கண்டித்த சித்தப்பா.. விவசாயி செய்த வெறிச்செயல் - திடுக்கிடும் தகவல் - Seithipunal
Seithipunal


 கள்ளக்காதலை கண்டித்ததால் சித்தப்பாவை வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பள்ளக்குழிப்பட்டி கிராமத்தில்  சாலையோரத்தில் முதியவர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைபார்த்து அந்த வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது பள்ளக்குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பதும், கடைக்கு வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து  சம்பவ இடத்திலேயே தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். அப்போது அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதாவது செல்வராஜின் அண்ணன் மகன் துரைசாமி, விவசாயி. இவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இதை செல்வராஜ் அவ்வப்போது கண்டித்து வந்தார். இதில் ஆத்திரமடைந்த துரைசாமி, சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சித்தப்பா செல்வராஜை வழிமறித்து திட்டி, தலையில் கல்லை போட்டு கொன்று இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து துரைசாமியை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uncle condemns forbidden love Shocking act committed by a farmer startling news


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->