நெல்லை விரையும் உதயநிதி ஸ்டாலின்! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திருநெல்வேலிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாநகர் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறிவியல் மையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

இதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திருநெல்வேலி செல்கிறார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் ஆய்வு மேற்கொள்ள திருநெல்வேலி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi Stalin going to Tirunelveli


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->