ஒரே பாதையில் வந்த இரு ரயில்கள்.? அதிர்ச்சிக்குள்ளான பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில் நேற்று மாலை அரை மணி நேரம் தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கிருந்து ரயில் புறப்பட்டதும் கேட் கீப்பர் அடுத்துள்ள கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்

அதேநேரத்தில் எதிர்மார்க்கத்தில் இயக்கப்படும் செங்கோட்டை மதுரை ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  ரயில்வே அதிகாரிகள் உடனடியாக வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு இரு ரயில்களையும் நிறுத்துமாறு அறிவுறுத்தினர்

இதனையடுத்து, இரண்டு ரயில்களும் நடு வழியிலே நிறுத்தபட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கு பின்னர் இரு ரயில்களும் புறப்பட்டது.

மதுரை செங்கோட்டை சிக்னல் கோளாறால், ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், பயணிகள் நலன் கருதி கோடை விடுமுறை காலங்களில் பராமரிப்பு பணிகள் நடத்துவதை மதுரை கோட்டம் கைவிட வேண்டும் என்றனர்

English Summary

two trains in same track


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal