சிவகங்கை : அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு 2000 ரொக்க பரிசு.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை : அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு 2000 ரொக்க பரிசு.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பருப்பூரணி பகுதியில் ஸ்ரீ சரஸ்வதி தொடக்கப்பள்ளி என்ற பெயரில் கடந்த 70 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 

தற்போது தமிழகம் முழுவதும், கோடை விடுமுறை முடிந்து நேற்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பள்ளி திறப்பின் முதல் நாளான நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் கல்லல் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ரமேஷ் என்பவர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேலும், அதிகரிக்கும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு தலா ரூ 2ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தில் ரொக்கப் பரிசு வழங்கிய சமூக ஆர்வலர் ரமேஷின் செயலை உள்ளூர் மக்களும், பள்ளி ஆசிரியர்களும் பாராட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two thousand money prices to student in govt school in sivakangai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->