கனமழை || இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!  - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, முப்பத்து நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கனமழை எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two districts schools holiday in tamilnadu for heavy rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->