''தோழர்களாய் ஒன்றிணைவோம்'' - த.வெ.க. முதல் உறுப்பினராக இணைந்த விஜய்.!  - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான  செயலியை நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தற்போது வெளியிட்டுள்ளார். 

முதல் உறுப்பினராக தன்னை கட்சியில் பதிவு செய்து காணொளியை விஜய் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இரண்டு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்ற இலக்கோடு செயலி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

அந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் நடிகர் விஜய், 'தோழர்களாய் ஒன்றிணைவோம்' என்ற வாசகத்துடன் நாங்கள் வெளியிட்டுள்ள உறுதிமொழி உங்களுக்கு பிடித்ததாக இருந்தால் இணைந்து செயல்படுவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, மகளிர் அனைவருக்கும் என் அன்பார்ந்த மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay joined first member


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->