தவெக கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைப்பு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 வாக்குபதிவு தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 

அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அப்போதே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்த நிலையில், நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் தினமும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். ஆனால், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக் காரணமாக, இன்று முதல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk party Adjournment discuss meetings for parliment election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->