சிறிது நேரத்திலேயே முடங்கிய உறுப்பினர் சேர்க்கை செயலி - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தொடங்கினார். இதையடுத்து, அவர் கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் கட்சியில் சேருவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து, கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலியில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக பதிவு செய்ய முயன்றுள்ளனர். இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி சிறிது நேரத்திலேயே முடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk membership app server down


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->