ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சசி., ஏற்க மறுத்த டிடிவி.! கொண்டாட்டத்தில் திமுக.! - Seithipunal
Seithipunal


கூட்டணி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் விருவிருப்பாக இருந்த சமயத்தில் அமமுக யாருடன் கூட்டணி வைக்கப் போகின்றது என்ற ஆர்வம் அனைவருக்கும் தலைதூக்கியிருந்தது.

அப்போது, சசிகலாவிடம் ஆலோசனை செய்த சட்டமன்ற இடை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என தினகரன் அறிவித்தார். அதன் பின்னர் அமமுக அனைத்திலும் மண்ணை கவ்வியது. இந்நிலையில் தற்போது சசிகலாவின் ஆலோசனையை கேட்காமல் தினகரன் எடுத்த முடிவு தான் இந்த தோல்விக்கு காரணம் என கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றன.

ஆலோசனை செய்த பொழுது சசிகலா, " எம்பி தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்றும், சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும், மேலும் 40 தொகுதிகளிலும் அமமுக தனித்து போட்டியிட்டால் திமுகவின் வெற்றிக்கு ஏதுவாக அமையும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் தினகரன் ஓவர் confident காரணமாக சசிகலாவின் பேச்சை கேட்காமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இடைத்தேர்தலில் கோட்டை விட்டதன் காரணமாக சசிகலாவிற்கு இன்னமும் கோபம் குறையவில்லையாம். 

இதன்பின்னர் தோல்விக்கு என்ன காரணம் என ஆலோசனை செய்த கூட்டங்களில் நாம் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என தொண்டர்கள் குறைபட்டுக் கொண்டது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 

சசிகலா தெரிவித்ததை போலவே திமுகவின் வெற்றிக்கு ஒருவகையில் அமமுக காரணமாகவே அமைந்துள்ளது. இனி வரும் தேர்தல்களில் தினகரனின் வியூகம் வேறு மாதிரியான விஷயங்களை அடிப்படையாக கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran over confident destination may reason for ammk destroy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->