இரட்டை இலைக்கு 5000 வாக்குகள் தான் கிடைக்கும்...!! டிடிவி தினகரன் கணிப்பு..!!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்திற்கு 5000 ஓட்டுகள் தான் கூடுதலாக கிடைக்கும் என கணித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து சசிகலா அவர்களின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதில் அளித்த அவர் "அதிமுகவில் நிலவும் சூழல் இவ்வாறு இருக்கும் பொழுது சின்னம்மாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னுடைய சார்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு தான் கூற முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஈரோடு கிழக்கில் அதிமுகவுக்கு கூடுதலாக 5000 வாக்குகள் தான் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் இரட்டை இலை கிடைத்ததினால் கூடுதல் வாக்கு கிடைக்கக்கூடும்.

இனி நிரந்தரமாக இரட்டை இலை எங்களுக்கு தான் என எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் பொழுது வாக்குகள் கூடும். ஆனால் இரட்டை இலை மேஜிக் சின்னம் இனி அவர்களுக்கு கை கொடுக்காது. அதிகபட்சம் 15 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் கூடுதலாக 5000 வாக்குகள் சேர்ந்து 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும்.

நான் அவர்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. ஈரோடு கிழக்கு களத்தில் உள்ள நிலவரத்தை தான் சொல்கிறேன். எனது நண்பர்கள், எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சொல்வதை தான் சொல்கிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran predicted only 5000 votes for double leaf


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->