விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ''பாரத ரத்னா'' விருது: டி.டி.வி தினகரன் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்படுத்திய விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவில் உணவுப் பொருட்கள் இறக்குமதி நிலை மாறி வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது. 

இந்த பெருமை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களையே சாரும். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண், ஆராய்ச்சிக்காக ஏற்கனவே பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளை பெற்றுள்ள எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதும் கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது. 

மேலும் பா. ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமரும் சிறந்த நாடாளுமன்ற வாதியுமான திரு.எல்.கே. அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran post goes viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->