#Breaking: முதல் கூட்டணியை உறுதி செய்த அமமுக... அதிகாரபூர்வ அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 அமமுக - ஒவைசி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், திரு.பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி M.P., அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் (AIMIM) கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ- இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் மூன்று (3) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன்படி, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில்,  அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தமிழக பொறுப்பாளர் முகமது ரஹமதுல்லா தாயப் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழக தலைவர் T.S.வக்கீல் அஹமது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran AMMK Owaisi AIMIM Party Alliance Confirmed


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->