தமிழகம் | போலீசிடம் சிக்கிய ரூ.70 லட்சம் மதுபானம்! அதிகாரியின் அதிரடி என்ட்ரியால் நடந்த டுவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


பாகலூர் அருகே போலீசார் ஈடுபட்ட வாகன சோதனையில் பெங்களூரிலிருந்து ஓசூர் நோக்கி வந்த லாரியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டிகள் இருந்தது  தெரிய வந்தது:

கிருஷ்ணகிரி: பாகலூர் அருகே உள்ள கக்கனூர் சோதனைச் சாவடியில் இன்று பாகலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து ஓசூர் நோக்கி அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த லாரியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தொடர் விசாரணையில் மதுபான பாட்டிகள், சென்னை அம்பத்தூருக்கு தனியார் சார்பில் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. 

அதை கொண்டு வந்ததற்கான ஆவணங்களும் சரியான முறையில் இல்லாததால், அந்த மதுபானபாட்டில் உள்ள லாரியை போலீசார் பறிமுதல் செய்து பாகலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் ஆயத்தீர்வை துறை அதிகாரி சிதம்பரம், உடனடியாக பாகலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, பிடிபட்ட மதுபான பாட்டில்களுக்கு உரிய வரியை தனியார் செலுத்திவிட்டதாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும்  போலீசாரிடம் ஒப்படைத்தார். 

பின்னர், அந்த லாரி விடுவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

truck carrying 70 lakh worth liquor bottles


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->