திருச்சியில் கேட்பாரற்று கிடந்ந 10 கார்கள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


கோவை கார் வெடிப்பு சம்பவம் கடந்த 23ஆம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் குறித்தான விவரங்கள் மற்றும் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர முழுவதும் முக்கியமான இடங்களில் கேட்பாரற்றை நிறுத்தப்பட்டுள்ள கார் மற்றும் இரு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். குறிப்பாக அரசு அலுவலகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், முக்கிய சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு (பிடிடிஎஸ்) போலீசாவுடன் இணைந்து தீவிர சோதனையை மேற்கொள்ள திருச்சி மாநகர் காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களை சோதனை செய்ய 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே மாநகரக்குள் காவல் துறையினர் அனுமதிக்கின்றனர். திருச்சி மாநகர் காவல் துறையினர் இன்று மேற்கொண்ட அதிரடி சோதனையில் மாநகரின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர் குறிப்பாக பிரபாத் ரவுண்டான அருகில் 9 கார்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்தது. 

இந்த கார்களை வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் உதவியுடன் காவல் துறையினர் தீவிரமாக சோதனை செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுக்க இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy city Police seized 10 cars


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->