சென்னை || கனமழையின் காரணமாக முறிந்து விழுந்த மரம்! நூலிழையில் தப்பிய வாகன ஓட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பொருத்தவரை ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பரவலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாநகரப் பேருந்துகளும் ஒரு சில இடங்களில் மழை நீரில் சிக்கியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதேபோன்று கனமழை பெய்யும் பொழுது மரங்கள் முடிந்துவிடும் சம்பவங்கள் அரங்கேறும். கடந்த ஆண்டு கனமழையின் பொழுது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இந்த நிலையில் சென்னை அடுத்த கொரட்டூரில் சாலை ஓரம் இருந்த மரம் கனமழையின் காரணமாக முறிந்து விழுந்துள்ளது. அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டி நூலிழையில் மரம் முறிந்து விழுந்து விபத்திலிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

lockquote class="twitter-tweet">

A TREE UPROOTED DUE TO #chennairains IN KORATTUR, LUXKILY NO ONE HURT - CCTV FOOTAGE.#CHENNAI @ChennaiRains @chennaicorp #CHENNAI #NortheastMonsoon pic.twitter.com/6utsmupDSO

— Suresh Kumar (@journsuresh) November 1, 2022


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tree fell due to heavy rain driver escaped from the accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->