#Breaking: துவங்கிய பேருந்து போக்குவரத்து.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தலைமை செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், புறநகர் பேருந்துகளில் 40 பயணிகளும், மாநகர் பேருந்துகளில் 30 பேர் பயணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5,659 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. 

பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்படும். QR கோடு பணப்பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளின் இயக்கத்திற்க்காக 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு பேருந்து இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் பாதுகாப்பு, முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவை உறுதி செய்யப்பட்டு வருகிறது. பேருந்துகளை சுத்தம் செய்வது போன்றவை தொடர் நடவடிக்கையாக எடுக்கப்படும். 

தமிழக விரைவு போக்குவரத்து சேவை இயக்கப்படவிலை. தனியார் பேருந்துகள் மக்களின் அத்தியாவசிய தேவையை பொறுத்து அவர்கள் இயக்கி கொள்வார்கள். தனியார் பேருந்திற்கான அனுமதி நேற்றே வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகள் கட்டணம் உயர வாய்ப்பில்லை. 

முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். பள்ளிகளுக்கு நடைபெறும் தேர்வுக்கு, மாணவர்களின் வசதிக்கேற்ப பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை தயாராக இருக்கிறது. மக்களின் நடமாட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பேருந்துகள் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். மண்டலத்திற்குள் மக்கள் பயணம் செய்து கொள்ளலாம். மண்டலம் விட்டு மண்டலம் பேருந்தும் செல்லாது, அவர்களின் அவசரத்திற்க்காக செல்லும் நேரத்தில் இ பாஸ் கட்டாயம். யாருக்கும் சம்பள பிடித்தம் என்பது செய்யவில்லை. ஒரு வருடத்தை கணக்கில் எடுத்து, சரியாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transport minister vijayabasker latest press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->