பொங்கல் பண்டிகை : ரயிலில் முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை : ரயிலில் முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு.!

வருகிற 2024 ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி போகிப் பண்டிகை தொடங்கி நான்கு நாட்களுக்கு பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால், பெரு நகரங்களில் பணியாற்றுவோர், படிப்போர் என்று அனைவரும் தங்களது சொந்த ஊர் செல்வது வழக்கம்.

ஒரே நேரத்தில் அனைவரும் ஊருக்கு செல்வதால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் சிரமத்தை தவிர்க்கும் விதமாக முன் கூட்டியே முன்பதிவு செய்து மக்கள் பயணம் மேற்கொள்வர். இந்த நிலையில், அவர்கள் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளும் விதமாக ரயில் முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். அந்த வகையில், ஜனவரி 11-ம் தேதி அன்று பயணம் செய்ய நாளை பயணசீட்டு பதிவு செய்யலாம்.

இதேபோல், ஜனவரி 12-ம் தேதிக்கு செப்டம்பர் 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதி செல்ல செப்டம்பர் 15-ம் தேதியும் பயணசீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train ticket booking start from tomarrow for pongal festival


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->