3 நாட்களுக்குபின் தொடங்கிய ரயில், விமான சேவை..! - Seithipunal
Seithipunal


தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக அதிகனமழை பெய்தது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

மேலும், தூத்துக்குடி விமான நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்டவற்றில் வெள்ள நீர் சூழ்ந்ததனால் விமான நிலையம் மூடப்பட்டு, சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடியில் மழை தற்போது ஓய்ந்து வெள்ள நீர் வடிய தொடங்கியது.

மேலும், விமான நிலையத்தில் தேங்கிய நீர் தற்போது அகற்றப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து, மூன்று நாட்களுக்குபின் சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து இன்று காலை ஆறு மணிக்கு 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு இன்று விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல், ரெயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train and flight service again start in thoothukudi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->