சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் சென்னை ஒயிட் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணியை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறையினரால் 28.01.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1) பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை திரு வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது

2) ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி வைட் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் நாளை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.

3) அண்ணா சாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

4) அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை திரு வி.க சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்‌ என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trafic changed in Chennai today onwards


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->