ஸ்ரீரங்கத்தில் நாளை சித்திரை தேரோட்டம்.! - Seithipunal
Seithipunal


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை நடைபெறுகிறது.

கடந்த 11-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து வருகின்ற 21-ஆம் தேதி வரை இத்திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின், 8-ம் நாளான இன்று நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைந்தார்.

இதையடுத்து, நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார். பின்பு அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்.

இதையடுத்து சிறப்பு பூஜைகளுக்குபின் காலை 6 மணியளவில் கோலாகலமாக தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் 20-ந்தேதி சப்தாவரணமம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Srirangam Renganathar temple Chithirai therottam festival


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->