கனமழை எதிரொலி.. தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதில், தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று இரவு முதல் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நான்கு தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow school holiday to Nilgiris district due to rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->