புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விடுமுறை நாட்கள், மதம் சார்ந்த பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை தினங்களில் அனைவருக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொண்டாடப்படும் கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள வீரனாம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழா நாளை நடைபெறுகிறது.

இதனையடுத்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow school holiday in Puducherry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->