அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள போடி, தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளான இராசிங்காபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, சிலமலை, மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, பாலார்பட்டி, கூழையனூர், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவில் தக்காளி விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள், 12 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த விலை உயர்வு குறித்து விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது:- "கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும், விளைச்சல் குறையவே விலை அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomatto price increase


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->