இன்று முதல் "அக்னி நட்சத்திரம்" ஆரம்பம்..! - Seithipunal
Seithipunal


அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற மே மாதம் 28ந்தேதி வரை நீடிக்கிறது. மேலும் அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நண்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்து வருகிறது. மேலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 7ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today start Agni Natchathiram May 4


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->