#BREAKING : மழை காரணமாக.. தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மதியம் மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் பரவலான மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today holiday for ranipet district due to heavy rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->