போராட்டத்தில் குதித்த வங்கி ஊழியர்கள்.! தமிழகத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு.!   - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் பத்து பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. 

அதாவது, பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக குறைக்க போவதாக கந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து, தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய வங்கிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை கைவிடும்படி தொழிற்சங்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தது. 

ஆனால்,வங்கி ஊழியர் சங்கங்கள் வைத்த எந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என டெல்லியில் வங்கி தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் வங்கிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். மேலும் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வங்கி ஊழியர்கள் சார்பில் பேரணி நடைபெறுகிறது. .

வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிகள் இன்று திறந்திருந்தாலும் வங்கி பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today bank staff strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->