குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தமிழகத்தில் இன்று குறிப்பிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றது.

மேலும், முக்கிய கோவில் திருவிழா மற்றும் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாங்குளம் கிராமத்தில் வீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று வீரன் அழகு முத்துகோன் 313 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள மந்தித்தோப்பு ரோடு, சிவஞானபுரம், பாண்டவர் மங்களம், தளவாய்புரம், செட்டிகுறிச்சி, அய்யனாரூத்து, கயத்தாறு, கோவில்பட்டி, குளத்தூர், விளாத்திகுளம், புதூர், பாண்டியாபுரம், ஒட்டப்பிடாரம், குறுக்கு சாலை, புதிய புத்தூர்  உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 32 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்பர்கள் அனைத்தும் இன்று (ஜூலை 11ஆம் தேதி) மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.‌ மேலும் இதனை மீறி விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Toasmac winesshop Today close in tuticorin


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->