மதுரையில்.. ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு "கலைஞர் பெயர்" சூடிய தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்துவதற்காக கலாச்சாரம் மையம் ரூ.44.6 கோடி மதிப்பில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 66 ஏக்கர் நிலப்பரப்பில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு கலாச்சார மைய கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. 

உலகத் தரத்தில் அமையும் ஜல்லிக்கட்டு கலாச்சார மையத்தில், வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, காளைகள் காத்திருப்பு கூடம், கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை, செயற்கை நீரூற்று, புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது . 

பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க உள்ள நிலையில் அரங்கத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt named kalainjar nuttrandu yeruthazhuvuthal arangam madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->