பொங்கல் பரிசு குறித்தான அறிவிப்பை தமிழக அரசு நாளை வெளியிட வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு நாளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி ஏற்பட்டதால் வரும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த அரசு திட்டமிட்டது.

ஆனால் வங்கி கணக்கில் செலுத்தினால் கிராமங்களில் வசிப்போர் பணம் எடுக்க சிரமப்படுவார்கள் என்பதால் ரொக்கமாக கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நேரடியாக மக்களுக்கு பணம் வழங்கினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என திமுக அரசு கருதுகிறது. இது ஒரு புறம் இருக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு துவங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதனால் மக்களிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்ற குழப்பம் நிலவி வருகிறது. கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடமும் இந்த குழப்பம் நிலவுவதால் பொங்கல் பரிசுக்கான பொருட்கள் கொள்முதல் செய்வதிலும் தீவிரம் காட்டாமல் உள்ளனர். இந்த நிலையில் நாளை பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt is likely to announce the Pongal gift package tomorrow


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->