#BigBreaking :: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு..!! தமிழக அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இளநிலை ஆசிரியர்கள் கடந்த ஆறு நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை 175 ஆசிரியர்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நிதி துறை செயலாளர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அந்தக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tngovt announced to consider demands govt teachers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->