சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.!! மாணவர்களுக்கான அதிர்ச்சி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் சனிக்கிழமைகளில் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

கனமழையின் காரணமாக இன்று விடுமுறை விடப்பட்ட பள்ளிகளின் வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt announced schools working day on Saturdays


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->