தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.!! இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசு, "அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. இதில், திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ் பானு என்ற திருநங்கை மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நேற்று (ஜூன் 14) இந்த வழக்கு நீவிசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி தமிழக அரசு சார்பில், அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி நலவாரியம் தொடங்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 

அவர்களுக்கான மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ல் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்ய வகை செய்யும் வகையிலும் அந்த அரசாணையில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள் ஜூன் 17ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announcement about reservation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->